Monday, 7 May 2012

கவிதையை வாசித்தல்



ஒரு கவிதையை வாசித்தல் என்பது ஒரு
வார்த்தையின் உச்சியில் அமர்ந்தபடி நகரத்தை
நோட்டமிடுவது மற்றும் மேகமாகிக் கரைந்து
தரிசுநிலத்தை நனைப்பது மேலும் ஆற்றங்கரையில்
அமர்ந்தபடி மிதக்கும் பிணத்தைத் தரிசிப்பது
அல்லது ஒரு தேனடையை கலைப்பது தவிர ஒரு
வார்த்தைக் கொள்ளையனை ஆழ்ந்து ரசிப்பது பிறகு
நான் என் கவிதையை வாசிக்கிறேன் என்பது
ஒரு கண்ணாடியுள் இன்னொரு கண்ணாடி பிறப்பது
மேலும் உன் கவிதையை வாசிப்பது என்பது
நீரற்ற ஒரு பாழ்க்கிணற்றுள் சென்று வாழும்
ஒரு
பழுத்த வேப்பிலை அல்லது கடலுக்குள்
அலைந்து கொண்டிருக்கும்
ஒரு மரக்குதிரை


பிரசுரம் 361' ஜனவரி 2012.

1 comment:

  1. ராணிதிலக் கவிதை நன்றாக இருக்கிறது, உண்மையாகவும் இருக்கிறது: ஆசை

    ReplyDelete